டொராண்டோவில் வசிக்கும் ஓய்வு பெற்ற வழக்கறிஞர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களின் பணத்தை வைத்திருந்ததாக வந்த புகார்களின் அடிப்படையில், மோசடி மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளைத் தற்போது எதிர்கொண்டுள்ளார்.
குறித்த நிதியை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், பிங்-டெங் தான் என்னும் அந்த நபர் இன்னும் தனது முன்னாள் வாடிக்கையாளர்களுக்கு, 1 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நபர் மீது 5,000 டொலருக்கும் அதிகமான இரண்டு மோசடி வழக்குகள், குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருந்தமை தொடர்பான இரண்டு வழக்குகள் மற்றும் பண மோசடி முதலான குற்றச்சாட்டுகளை டொராண்டோ காவல்துறையினர் சுமத்தியுள்ளனர்.