Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

மகளிர் கபடி உலகக் கிண்ணத்தில் இந்திய மகளிர் அணி சாதனை!

நவம்பர் 25, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

2025ம் ஆண்டுக்கான மகளிர் கபடி உலகக் கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபேனை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

சர்வதேச கபடி சம்மேளனம் சார்பில் இரண்டாவது மகளிர் கபடி உலகக் கிண்ண தொடரானது பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கடந்த நவ. 17ஆம் திகதி தொடங்கியது. முதல் முறையாக இந்தியா தவிர்த்து வேறு நாட்டில் உலகக் கிண்ண தொடர் நடைபெறுவதால், இதன் மீதான எதிர்பார்ப்பு இந்திய இரசிகர்கள் மத்தியில் சற்று கூடுதலாகவே இருந்தது.

மொத்தம் 11 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, பங்களாதேஷ், ஈரான் மற்றும் சீன தைபே அணிகள் முன்னேறின. அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 33-21 என்ற கணக்கில் ஈரான் மகளிர் அணியையும், சீன தைபே அணி 25-18 என்ற கணக்கில் பங்களாதேஷையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

நேற்றைய தினம் இந்தியா மற்றும் சீன தைபே அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியானது நடைபெற்றது. இப்போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய மகளிர் அணி அடுத்தடுத்து புள்ளிகளை வென்று அசத்தியது. அதேசமயம் சீன தைபே அணியும் விட்டுக்கொடுக்காமல் விளையாட ஆட்டத்தின் பரபரப்பு கூடியது.

இருப்பினும் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 20 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், சீன தைபே மகளிர் அணியால் 16 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 4 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் பாதியில் முன்னிலை பெற்றுது.

பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அபாரமாக செயல்பட்ட இந்திய மகளிர் அணி முன்னிலையைத் தக்கவைத்ததுடன், 15 புள்ளிகளை வென்றது. மறுபக்கம் இறுதிவரை போராடிய சீன தைபே மகளிர் அணியால் இரண்டாம் பாதியில் 12 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு கபடி உலகக் கிண்ண தொடரில் இந்திய மகளிர் அணி சம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.

முந்தைய செய்தி அரசன் திரை படத்தில் இணைந்த விஜய் சேதுபதி!
அடுத்த செய்தி கியூபெக்கின் ‘Bill 96’ ஆங்கிலம் பேசுகின்றவர்களுக்கு நிதித் தடைகளை உருவாக்குகிறது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

ICC T20 உலகக்கிண்ண தொடருக்கான ஆப்​கானிஸ்​தான் அணி அறிவிப்பு!

ஜனவரி 1, 2026
விளையாட்டு

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அர்செனல் அணி முதலிடம்!

டிசம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

மார்ச் 26, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

இறுதிச் சுற்றை இழந்தது மும்பை மற்றும் இந்தியா

ஜூன் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?