பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில் சிக்கி காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமற்போனவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமற்போன நபரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


