கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தை அண்மித்த மஹா ஓயா பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிரிஉல்ல, பொல்கஹவெல மற்றும் படல்கம போன்ற இடங்களில் 100 மில்லி மீற்றர் அளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் ஆற்றுப் பகுதிகளில், நில்வலா கங்கையின் கீழ் ஆற்று பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் கிங் கங்கை, களு கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓயா, யான் ஓயா, தெதுறு ஓயா மற்றும் மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களுக்கு அண்மித்த பகுதிகளில் 50-75 மில்லி மீற்றர் வரையான குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் நீர்த்தேக்கங்களில் தற்போது 55% கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


