Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் நினைவாக புகையிரத நிலையங்களை அழகுபடுத்திய சாரணர்கள்.

பிப்ரவரி 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் ரொபேர்ட் பேடன் பவல் பிரபுவின் 168 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை சாரண சங்கத்தின் வவுனியா மாவட்ட கிளையின் சாரணர்கள் வவுனியாவிலுள்ள புகையிரத நிலையங்களை அழகுபடுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.

சாரணர் சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் யோ.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இன்று (22.02) இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்படி வவுனியா புகையிரத நிலையம், தாண்டிக்குளம் புகையிரத நிலையம், ஓமந்தை புகையிரத நிலையம், புளியங்குளம் புகையிரத நிலையம், செட்டிக்குளம் புகையிரத நிலையம் ஆகிய புகையிரத நிலையங்களை ஒரே நாளில், ஒரே நேரத்தில் அழகுபடுத்தும் செயற்பாடுகளில் வவுனியா சாரணர்கள் ஈடுபட்டனர்.

இத்திட்டம் தேசிய சாரணர் தலைமையகத்தின் கருத்தாக்கம் மற்றும் க்ளீன் சிறிலங்கா திட்டத்துடன் இணைந்து செயற்படும் தேசிய வேலைத்திட்டமாகும்.

இதன் பிரதான நிகழ்வு வவுனியா பிரதான புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது. புகையிரத நிலையத்தினை சூழவுள்ள பகுதிகளிலுள்ள பிளாஸ்டிக், பொலித்தீன், ஏனைய கழிவுகளை அகற்றி புகையிரத நிலையத்தினை துய்மையான இடமாக மாற்றியமைத்தனர்.

இந்நிகழ்வில், வவுனியா புகையிரத திணைக்கள அதிபர் சி.அகிலேஸ்வரன், இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தின் உதவி ஆணையாளர் எஸ்.மயூரன், மாவட்ட சாரணங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், உதவி மாவட்ட ஆணையாளர்கள், திரி சாரணர்கள், சமாதானத்திற்கான தூதுவர் குழுவினர், பொறுப்பாசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்தி நாவல் பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்.
அடுத்த செய்தி வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மீது முறிந்து விழுந்த மரணம் – மயிரிழையில் தப்பிய முதிய பெண்மணி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அகற்றப்பட்டது அத்துமீறி வைக்கப்பட்ட புத்தர் சிலை!

நவம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

Breaking – உள்ளூராட்சித் தேர்தல் திகதி வெளியானது

மார்ச் 20, 2025
இலங்கை

எக்ஸ்பிரஸ் பேல் இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்-சஜித்!

செப்டம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். வாகன விபத்து

ஜனவரி 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?