இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், பல வித வாழ்க்கை முறை நோய்கள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோய், உயர் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை அதிக அளவில் மக்களை ஆட்கொள்கின்றன்ன. சமீப காலங்களில் குறிப்பாக பலர் உயர் இரத்த அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீண்ட கால உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான நோயாளிகள் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் மிகவும் மோசமான உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர் என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களது வாழ்க்கை முறையில் உடற்பயிற்சியும் இல்லாமல் உடல் செயல்பாடுகளே இல்லாத நிலை இருக்கின்றது. பலர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்துகளின் உதவியை நாடுகிறார்கள். மருந்துகளுடன் சேர்ந்து, உணவுமுறை மூலமாகவும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
சில உணவுகள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிய அளவில் உதவுகின்றன. அவற்றில் சில பழங்களும் அடங்கும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்டுவதோடு உடல் ஆரோக்கியத்தை பல வழிகளில் மேம்படுத்தும் ஒரு பழமாக நாவல் பழம் உள்ளது.
நாவல் பழம்
நாவல் பழம் ஒரு அடர் நீல நிற பழம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் உள்ளன. இதில் இருக்கும் கலோரிகளின் அளவு பூஜ்ஜியம் என கூறப்படுகின்றது. நாவல் பழம் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் நாவல் பழம் மிகவும் நன்மை பயக்கும். தினமும் ஒரு கிண்ணம் நாவல் பழங்களை சாப்பிடுவது இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும். நாவல் பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. ஆகையால் நாவல் பழத்தை உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
நாவல் பழத்தை எப்போது சாப்பிடுவது நல்லது?
நாவல் பழத்தை தவறான நேரத்தில், தவறான முறையில் சாப்பிட்டால், அது நன்மை பயக்காது. மாறாக இப்படி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குப் பிறகு, தினமும் 1 கிண்ணம் நாவல் பழங்களை உட்கொள்ளலாம் என சுகாதர நிபுணர்கள் கூறுகிறார்கள். நாவல் பழம் உட்கொள்ளத் தொடங்கி சில நாட்களில் நல்ல பலன் தெரியும்.
நாவல் பழத்தை இப்படி சாப்பிடக்கூடாது
உயர் இரத்த அழுத்தம் உள்ள ஒருவர் ஒருபோதும் சாட் மசாலா அல்லது உப்பு சேர்த்து நாவல் பழத்தை சாப்பிடக்கூடாது. இது உடலுக்கு நல்ல பலன்களை அளிப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். மேலும், நாவல் பழங்களை வாங்கிவிட்டு, அவற்றை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் எதையும் கலக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும்.
இவர்கள் நாவல் பழங்களை தவிர்க்க வேண்டும்
அதிக இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு நாவல் பழம் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். ஆனால் குறைந்த இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் நாவல் பழங்களை சாப்பிடக் கூடாது. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நாவல் பழங்களை சாப்பிட்டால், அவர்களின் இரத்த அழுத்தம் கணிசமாகக் குறையும். ஆகையால், குறைந்த இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் இதை கண்டிப்பாக மனதில் கொள்ள வேண்டும்.