Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசாதீர்கள் – சீ.வீ.கே .சிவஞானம்

ஏப்ரல் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சித்திரை புத்தாண்டில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம் என்ற திடசங்கற்பத்தை எடுக்க வேண்டும் என கட்சி நலன் கருதியும் தமிழின நலன் கருதியும் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்வதாக அக்கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு மற்றும் அரசியல் குழு உறுப்பினர்களுக்கு கட்சி தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அனுப்பி வைத்த குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பில்,

1949இல் உருவாக்கப்பட்ட எமது முன்னோடிகளின் அர்ப்பணிப்புகள் மற்றும் அவர்களின் தியாகங்களினால் இன்று வரை உயிர்ப்புடன் அரசியல் இலக்கு பற்றுடன் செயற்பட்டு வருகிற ஒரேயொரு கட்சியாக செயற்பட்டு வருகிறது.

ஆரம்ப முதல் கட்சியை பிளவுபடுத்தி அழித்து விடும் முயற்சிகள் தொடர்ந்தாலும் அவற்றை எல்லாம் ஒற்றுமையாக எதிர்த்து வெற்றி கண்டுள்ளோம். இலங்கைத் தமிழர்களின் இனத்துவ மற்றும் நிலத்துவ உணர்வுகளை தளர்வின்றி முன்னெடுக்கும் தனித்துவமான ஒரேயொரு கட்சி நாங்கள்தான் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

தென்னிலங்கை இனவாத அரசியலை எதிர்த்து தமிழின காப்பனராக இருக்கும் எமது கட்சியை உடைத்து சிதைத்து அழித்துவிட பலமான ஊடுருவல்கள் இடம் பெறுவதை நாம் பார்க்கிறோம்.

இந்த நிலையில் எமது கட்சி ஒற்றுமையாக செயல்பட வேண்டிய நேரம் இது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள்.
அண்மைக் காலமாக எமது கட்சியின் உள்விவகாரங்கள் பொது வெளியில் பேசப்பட்டு வருவது நமது எதிரிகளுக்கு வாய்பளிப்பதை நீங்கள் உணராதவர்கள் அல்ல என்பதை நான் அறிவேன்.

எனவே இந்த சித்திரை புத்தாண்டில் இருந்து எமது கட்சிக்குள் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம் என்ற திடசங்கர்ப்பத்தை எடுக்க வேண்டும் என கட்சி நலன் கருதியும் தமிழின நலன் கருதியும் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன் – என்றுள்ளது.

முந்தைய செய்தி சாதனை படைத்த நான்கு சிறுவர்கள்
அடுத்த செய்தி அமெரிக்க படைகள் பாதுகாப்பற்றது – டாக்டர் அப்துல்காலிக் அப்துல்லா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது!

ஜூன் 7, 2025
இலங்கை

மன்னார் காற்றாலை தொடர்பாக ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

நவம்பர் 4, 2025
இலங்கை

வீட்டு கூரை திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது தவறி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேங்காய் தலையில் விழுந்ததில் 2 வயது குழந்தை உயிரிழப்பு!

ஆகஸ்ட் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?