பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் அல்பெர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) ஆகியோர் அல்பெர்ட்டாவின் எரிசக்தி துறையின் எதிர்காலம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்த வாரம் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு லிபரல் அரசாங்கத்தால் தடுக்கப்பட்ட நீண்டகாலக் கோரிக்கையான வடமேற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கான (B.C.) எண்ணெய் குழாய் பாதைக்கான வழியை இந்த ஒப்பந்தம் அமைக்கும் என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பிரதமர் கார்னியின் தலைமையிலான மத்திய அரசு இப்போது எண்ணெய் குழாய் பாதை திட்டத்தைக் கருத்தில் கொள்ளத் தயாராக இருந்தாலும், இதற்குச் சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அல்பெர்ட்டா மாகாண அரசு, இந்தத் திட்டத்தை முன்னெடுக்கும் தரப்பாக, பூர்வீகக் குடிகளின் ஆலோசனையை முறையாக நடத்த வேண்டும் என்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசுடன் அல்பெர்ட்டா மாகாண அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் காண வேண்டும் என்று, நாட்டின் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் எண்ணெய் குழாய் பாதைக்கு பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் டேவிட் எபி (David Eby) கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


