பிரித்தானியாவில் உள்ள பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் தலைவர் மற்றும் செய்திப் பிரிவின் தலைமை அதிகாரி ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
பி.பி.சி.செய்தி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகின்றது என எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாகவே இவர்கள் பதவி விலகியுள்ளனர்
இதன்படி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2021 ஆம் ஆண்டில் பேசியதன் இரண்டு வேறுபட்ட பகுதிகளை ஒன்றாகத் தொகுத்து, அவர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக பி.பி.சி. வெளியிட்டது முக்கிய முறைப்பாடாக இருந்தது.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் பற்றிய செய்திகளில் பி.பி.சி. பாரபட்சமாக நடந்துகொண்டதாக, நிறுவனத்தின் முன்னாள் தரநிலை ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் டெய்லி டெலிகிராப் பத்திரிகையிடம் தகவல்களைக் கசியவிட்ட பிறகு, பி.பி.சி. மீதான நெருக்கடி மேலும் அதிகரித்தது.
மேலும், பி.பி.சி. ஒரு பிரசார இயந்திரம் போலச் செயல்படுவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நேரடியாகக் குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
