Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

முத்தரப்புத் தொடர் மற்றும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு!

நவம்பர் 8, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி குழாமை அறிவித்துள்ளது.இதற்கிடையில், பாகிஸ்தான் அணி இந்தத் தொடருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவுடன் இரண்டு டெஸ்ட் (1-1 சமநிலை) மற்றும் மூன்று T20 போட்டிகளில் (2-1 வெற்றி) விளையாடியது. அதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் தற்போது 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

இலங்கை அணிக்காக இரு வடிவப் போட்டிகளுக்கும் ( ODI மற்றும் T20) சரித் அசலங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடர் மற்றும் சிம்பாப்வேயும் பங்கேற்கும் ஒரு T20 முத்தரப்புத் தொடர் ஆகியவை அடங்கும்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான குழாம்

சரித் அசலங்க (C), பெத்தும் நிஸ்ஸங்க, லஹிரு உதார, கமில் மிஷார, குசல் மெந்திஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெந்திஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, பிரமோத் மதுஷான், ஈஷான் மாலிங்க.

இருபதுக்கு – 20 போட்டிக்கான குழாம்

சரித் அசலங்க (C), தசுன் ஷானக (VC), பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெந்திஸ், குசல் பெரேரா, கமில் மிஷார, கமிந்து மெந்திஸ், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, அசித பெர்னாண்டோ, ஈஷான் மாலிங்க.

ஒருநாள் குழாமில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தின்படி, முதலில் பெயரிடப்பட்டு முழங்கால் காயம் காரணமாக விலகிய தில்ஷான் மதுஷங்கவிற்குப் பதிலாக ஈஷான் மாலிங்க சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், மத்தீஷ பத்திரன மேல் சுவாசக்குழாய் தொற்றுநோயிலிருந்து மீண்டு வருவதால் அவர் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அசித பெனாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த தொடருக்குக் குறைபாடற்ற பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, காவல்துறைக்கு உதவுவதற்காகப் பாகிஸ்தான் இராணுவம், ரேஞ்சர்கள் (Rangers) மற்றும் விமானப்படை பிரிவுகளின் சேவைகள் கோரப்பட்டுள்ளன. இந்தநிலையில் பாதுகாப்புப் படையினர் இன்றிலிருந்து பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பஞ்சாப் உள்துறை திணைக்களம் நிறைவு செய்துள்ளது.

குறித்த தொடரானது நவம்பர் 11 முதல் 27ஆம் திகதி வரை லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது.

முந்தைய செய்தி கொழும்பு பிரதான வீதியில் லொறியுடன் மோதி சிறுவன் உயிரிழப்பு!
அடுத்த செய்தி கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் – யாழில் கைதானவர்களிடமிருந்து வெளியாகிய உண்மை !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

வலுவான நிலையில் பங்களாதேஷ் அணி!

ஜூன் 18, 2025
விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கான – முதலாம் நாள் ஆட்டம் நிறைவு!

ஜூன் 17, 2025
விளையாட்டு

மெஸ்ஸி தலைமைலான அர்ஜென்டினா கால்பந்து அணி,கேரளாவுக்கு சுற்றுப்பயணம்!

நவம்பர் 4, 2025
விளையாட்டு

1000ம் கோல்கள் என்ற இலக்கு – ரொனால்டோவின் திடீர் முடிவு!

நவம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?