விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா நேரில் கண்டுகளித்தனர். இந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
டென்னிஸ் விளையாட்டின் முக்கிய தொடராக பார்க்கப்படும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடர், லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் செர்பியாவின் ஜோகோவி அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியை முன்னாள் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் நேரில் கண்டுகளித்தார்.
அதேபோல், இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோஹ்லியும், அவரது மனைவி மற்றும் பொலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவும் ஜோகோவிச் ஆட்டத்தை பார்வையாளர் பகுதியில் இருந்து நேரில் கண்டுகளித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
