லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்றைய தினம் 18 வது போட்டி தொடரானது நடைபெறுகின்றது.
இப்போட்டியில் தம்புள்ளை சிக்சர்ஸ் மற்றும் கண்டி ஃபெல்கன்ஸ் ஆகிய அணிகள் மோதிக் கொள்ளவுள்ளன. போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை சிக்சர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இந்நிலையில் கண்டி அணியானது துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்களின் நிறைவில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களை கண்டி ஃபெல்கன்ஸ் அணியானது பெற்றது.
மேலும் 223 என்ற வெற்றி இலக்கோடு தம்புள்ளை சிக்சர்ஸ் அணியானது மோதவுள்ளது.