இந்த ஆண்டுக்குரிய பாரிஸ் ஒலிம்பிக் போட்டியானது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 100 மீற்றர் பின்னோக்கி நீந்தும் நீச்சல் போட்டியில் இலங்கையை சேர்ந்த கங்கா செனவிரத்ன முதலாவது இடத்தை பெற்றுள்ளார்.
கங்கா செனவிரத்ன ஒரு நிமிடம் 04.26 வினாடிகளில் பின்னோக்கி நீந்தி இந்த சாதனையை புரிந்த்துள்ளார்.
மேலும் இந்த பின்னோக்கி நீந்தும் போட்டியில் இரண்டாவது இடத்தை மொசாம்பிக் நாட்டு வீராங்கனையும், மூன்றாவது இடத்தை துர்க்மெனிஸ்தான் நாட்டு வீராங்கனையும் பெற்றுக் கொண்டனர்.
கங்கா செனவிரத்ன முதலாம் இடத்தை பெற்ற போதிலும் 16 போட்டியாளர்கள் அடங்கிய தேர்வில் இவர் தெரிவாகவில்லை.