காலி – கொழும்பு பிரதான வீதியில் வெட்டுமகடை சந்திக்கருகில் சைக்கிளில் பயணித்த 11 வயது சிறுவன் ஒருவர் லொறியொன்றில் மோதி உயிரிழந்துள்ளார்.
காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வீதியைக் கடக்க முற்பட்டபோதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காயமடைந்த சிறுவன் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சடலம் களுத்துறை நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்குப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
