ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors – GM) மற்றும் தென் கொரியாவின் போஸ்கோ ஃபியூச்சர் எம் (POSCO Future M) ஆகிய நிறுவனங்கள் இணைந்து, கியூபெக் மாகாணத்தின் பெகான்கூரில் செயல்படுத்த திட்டமிட்டிருந்த மின்கலன் உதிரி பாகங்கள் தொழிற்சாலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அந்த இரண்டாம் கட்ட விரிவாக்கப்பணிகளை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக, அந்த இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
இதன் காரணமாக, இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்கு மூலப்பொருட்களை வழங்கவிருந்த பிரேசிலிய சுரங்க நிறுவனமான வேல் பேஸ் மெட்டல்ஸ் (Vale Base Metals), தனது புதிய தொழிற்சாலையின் கட்டுமானத் திட்டத்தை முற்றிலுமாக இரத்து செய்துள்ளது.
கியூபெக் பொருளாதார அமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Frechette), இந்த முடிவால் ஏமாற்றம் அடைந்ததாகத் தெரிவித்தார்.
இந்த இடைநிறுத்தம் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.