மொன்றியல் நகரத்தின் மேயர் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன.
இந்த நிலையில் வெளியான சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் ‘என்சம்பிள் மொன்றியால்’ (Ensemble Montréal) கட்சியின் தலைவர் சொரயா மார்ட்டினெஸ் ஃபெராடா (Soraya Martinez Ferrada) தேர்தலில் முன்னிலை வகிக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றன.
இருப்பினும், தேர்தலுக்கு வாக்களிக்க முடிவெடுக்காதவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருப்பதால், போட்டி முடிவுகளை செம்மையாகக் கணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
சொரயா மார்ட்டினெஸ் ஃபெராடா 26 சதவீத மக்கள் ஆதரவுடன் முன்னிலை வகிப்பதாக கருத்துக் கணிப்பின் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய வாக்காளர்களில் 37 சதவீதமானோர் தாம் இன்னும் யாருக்கு வாக்களிக்கப் போவது என்று முடிவெடுக்கவில்லை அல்லது வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.