டொராண்டோ டஃபெரின் மாலில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த சனிக்கிழமை மாலை நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஐந்து நபர்களை டொராண்டோ காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.
டஃபெரின் தெரு மற்றும் ப்ளூர் தெரு மேற்குப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள டஃபெரின் மாலுக்குள் இருக்கும் மைக்கேல் ஹில் (Michael Hill) நகைக்கடையில் இரவு 7:20 மணியளவில் இந்தக் கொள்ளை நடந்தது.
முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கடைக்குள் நுழைந்த போது, அந்த குழுவில் இருவர் சுத்தியல்களை கையில் வைத்திருந்தமையை காவல்துறை உறுதி செய்துள்ளது.
கொள்ளையர்கள் சுத்தியல்களைப் பயன்படுத்தி கடையின் கண்ணாடிக் காட்சிப் பெட்டிகளை (Display Cases) உடைத்துச் சூறையாடினர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் போது யாருக்கும் எந்த விதமான உடல் காயங்களும் ஏற்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கொள்ளையர்கள் வணிக வளாகத்தை விட்டு வெளியேறி, கருப்பு நிற வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது
