நேற்றைய தினம் ஒண்டாரியோ ஹாமில்டன் பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் மரணம் அடைந்தார்.
வியாழக்கிழமை 9 :45 மணியளவில் போர்ச் ரக வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி சென்று மின்கம்பத்தில் மோதியதால் கார் விபத்துக்கு உள்ளானது, இதில் 31 வயதான வாகனசாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றவேளையில் சிகிக்சை பயனளிக்காத நிலையில் உயிர் இழந்தார் மற்றும் அவருடன் பயணித்த மற்றொரு பயணி படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றார்,
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஹால்டன் போலீஸ் மற்றைய பயணிக்கு உயிர் ஆபத்து இல்லை என்பனை உறுதி படுத்தினார்.இந்த விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஹால்டன் போலீசார் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக
தகவல் அறிந்தவர்கள் 905-825-4747, ext. 5065.இலக்கத்துக்கு தகவல் தருமாறு கேட்டுக்கொண்டனர்.