மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய முன்பாக தனியர் பேருந்து வண்டியும் சிறிய ரக லொறி ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை 10.30 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து நடத்துனர் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஆரையம்பதியில் இருந்து கதுருவெல பிரதேசத்துக்கு பிரயாணித்த தனியார் போக்குவரத்து பேருந்தும் வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிஸ்கட்கள் ஏற்றிச் சென்ற லொறியும் சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்னால் உள்ள வீதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது
இதில் பேருந்து நடத்துனர் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் லொறியில் சென்றவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்ததையடுத்து அவர்களை சித்தாண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
