கியூபெக் மாகாணத்தில் 30 ஆதிகாமெ இனப்பெருக்கங்களுக்கு கருத்தடை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு!
கியூபெக் மாகாணத்தில் சுமார் 30 ஆதிகாமெக் (Atikamekw) இனப் பெண்களுக்கு அவர்கள் சம்மதமின்றி அல்லது கட்டாயப்படுத்தி கருத்தடை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கியூபெக்கில் உள்ள லாநோடியர் (Lanaudière) பகுதி சுகாதார மையங்கள், குறிப்பாக ஜோலியட் மருத்துவமனை (Joliette hospital) உள்ளிட்ட இடங்களிலேயே இந்த கருத்தடை சிகிச்சைகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்கள் பிராந்திய சுகாதார அமைப்பு (CISSS de Lanaudière) மற்றும் மூன்று மருத்துவர்களுக்கு எதிராக கூட்டு வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் 1980 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நீடிக்கும் நீண்ட கால சம்பவங்களை உள்ளடக்கியுள்ளன.
தாமாக முன்வந்து வழக்கை வழிநடத்தும் இரண்டு ஆதிகாமெக் பெண்கள், தங்களது இனப்பெருக்க உரிமைகளைப் பாதிக்கும் இந்த முக்கிய அறுவை சிகிச்சைகள், சுதந்திரமான மற்றும் முழுமையான சம்மதம் இல்லாமல் செய்யப்பட்டதாகக் கூறுகின்றமை குரிப்பிடத்தக்கது.


