இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதி வரையில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக 4,500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை 4,626 முறைப்பாடுகள் தங்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்ததாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அந்தக் காலகட்டத்தில், 85 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டு 58 பேர் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் அதிகாரிகள் என்பதுடன், அவர்களின் எண்ணிக்கை 19 பேர் ஆகும்.
கைது செய்யப்பட்டவர்களில், 08 பொலிஸ் சார்ஜென்ட்கள், 05 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் மூன்று உப பொலிஸ் பரிசோதர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது
