வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை மற்றும் ஓட்டுமாவடி பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 4 போதை பொருள் வியாபாரிகளை 12 கிராம் 500 மில்லிக்கிராம் ஹரோயின் , 2 கிராம் ஜஸ்போதை பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை (06) அதிகாலையில் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலையிலுள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான இன்று அதிகாலை 2.00 மணிக்கு குறித்த பிரதேசங்களில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தவர்களின் வீடுகளை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன் போது பிறந்துறைச்சேனையில் 12 கிராம் 500 மில்லிக்கிராம் ஹரோயினுடன் ஒருவரையும் ஓட்டுமாவடியில் 2 கிராம் ஐஸ் போதை பொருளுடன் இருவரையும் போதை மாத்திரையுடன் ஒருவர் உட்பட நான்கு வியாபாரிகளை கைது செய்தனர்.
இதில் கைது செய்தவர்களை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.