கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஜெரால்ட் நிக்கோலஸ் (Gérald Nicolas) என்ற கனடியர், ஹெய்ட்டி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்குடன் ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தூண்ட முயன்ற குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடந்த இந்தச் சதித்திட்டம் தொடர்பாக, மார்ச் மாதமே குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட அவருக்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டது.
கனடாவின் பொது வழக்குத் தொடரும் சேவை (PPSC) வெளியிட்ட அறிக்கையில், நிக்கோலஸ் மீது சுமத்தப்பட்ட முக்கியக் குற்றச்சாட்டுகள் மற்றும் தண்டனை விவரங்கள் உறுதி செய்யப்பட்டன.
பயங்கரவாதச் செயலைத் தூண்டும் நோக்குடன் கனடாவை விட்டு வெளியேறியமை மற்றும் அத்தகைய பயங்கரவாதச் செயலைச் செயல்படுத்த உதவியமை முதலான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
நிக்கோலஸ் அப்போதைய ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மொய்சேவின் (Jovenel Moïse) அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக ஆயுதமேந்திய புரட்சியைத் தூண்ட முயன்றதாகக் கண்டறியப்பட்டது.
நிக்கோலஸ் தனது திட்டத்தை நடைமுறைப்படுத்த டொமினிகன் குடியரசுக்கும் ஹெய்ட்டிக்கும் பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.