ஒட்டாவா காவல்துறையானது, ஒட்டாவா நகரை நான்கு தனித்துவமான காவல்துறை மாவட்டங்களாகப் பிரிக்கும் புதிய சேவைப் பிரிப்பு மாதிரியை (deployment model) நடைமுறைப்படுத்தவுள்ளது.
இவை கிழக்கு, மத்திய, மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் எனப் பிரிக்கப்படும்.
இந்த மறுசீரமைப்பு, குறிப்பாக ஒட்டாவாவின் வேகமாக வளர்ந்து வரும் தெற்குப் பகுதியில், காவல்துறை இருப்பை மேம்படுத்துவதையும், பதிலளிக்கும் நேரங்களைக் குறைப்பதையும், சமூகத்துடன் ஆழமான தொடர்புகளை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மூன்று ஆண்டுகளில் $11.4 மில்லியன் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கத்திற்கு இடமளிக்கும் வகையில் 63 புதிய பொலிஸ் அதிகாரிகளும், பொதுத்துறை நிபுணர்களும் நியமிக்கப்படுவார்கள்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஒட்டாவா காவல்துறையின் தலைவர் எரிக் ஸ்டப்ஸ், ” ஒட்டாவா நகரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சிறந்த சேவையை வழங்குவதே இந்த மறுசீரமைப்பின் இலக்கு” என்று தெரிவித்துள்ளார்.
ஒட்டாவாவில், புதியதாக உருவாக்கப்படும் நான்கு காவல்துறை மாவட்டங்களில், ஒவ்வொன்றும் ஒரு கண்காணிப்பாளர் தலைமையில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
