Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

2030ஆம் ஆண்டுடன் முடிவடைய உள்ள ISS விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டுக் காலம்!

செப்டம்பர் 28, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டுக் காலம், வரும் 2030ஆம் ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தது என்ன என்பது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல், பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில், ஐ.எஸ்.எஸ் (International Space Station) எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையம் செயல்படுகிறது.

இதை அமெரிக்காவின் நாசா அமைப்பு கட்டமைத்தது. ஆய்வுப் பணியை வரும் 2030ஆம் ஆண்டுடன் நிறைவு செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விண்வெளி வரலாற்றில் மனித குலம் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தை மூடவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐ.எஸ்.எஸ்.இல் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா மற்றும் மிகச் சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஆராய்ச்சி மையமாக விளங்கும் இந்த விண்வெளி நிலையத்தில் 24 மணி நேரமும் தொடர்ந்து பயணித்து, 4,000க்கும் மேற்பட்ட புரட்சிகரமான ஆராய்ச்சிகளை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் மேற்கொண்டு, சுற்றுப்பாதையில் உலகளாவிய ஒத்துழைப்பை எவ்வாறு அடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

இந்த ஆய்வுகள் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு வழிவகுத்துள்ளன.

அவை எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு உதவும் அதே வேளையில், பூமியில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் முன்னேற்றவும் உதவியுள்ளன.

இந்நிலையில், ஐ.எஸ்.எஸ்.க்கு மாற்றாக, வணிக விண்வெளி நிலையங்களை மையமாகக் கொண்ட ஒரு புதிய மாதிரியின் வாயிலாக விண்வெளியில் மனித இருப்பை தக்க வைக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா திட்டமிட்டுள்ளது.

தனியார் பங்களிப்பு தன் சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து இதற்காக ஒரு திட்டத்தை வகுத்துள்ளது.

இதன்படி, இனி ஒரு அரசுக்குச் சொந்தமான விண்வெளி நிலையத்தைக் கட்டி இயக்குவதை விட, ஒரு புதிய தலைமுறை விண்வெளி நிலையங்களை உருவாக்கி இயக்குவதற்குத் தனியார் நிறுவனங்களுடன் நாசா இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த அணுகுமுறையால் செலவு குறைவதுடன், ஒரு வலுவான விண்வெளி பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக, புதிய விண்வெளி நிலையங்களை உருவாக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க நாசா, 3,520 கோடி ரூபாய்க்கும் (இந்திய மதிப்பில்) அதிகமாக முதலீடு செய்துள்ளது.

வரும் 2030 இல் ஐ.எஸ்.எஸ்., ஆயுட்காலம் முடியும் முன் இந்த புதிய விண்வெளி நிலையத்தைத் தயார் செய்து இயக்குவதே நாசாவின் நோக்கமாகும்.

அதன்பின், தற்போதுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை, சுற்றுவட்டப் பாதையிலிருந்து அகற்றி, பசுபிக் பெருங்கடலின் தொலைதூர பகுதியில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி வரவிருக்கும் பாதீட்டுத் திட்டத்தில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்பட மாட்டாது-ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!
அடுத்த செய்தி கரூரில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தடயவியல் குழுவினர் ஆய்வுகள் முன்னெடுப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் புயல்.

டிசம்பர் 2, 2024
அண்மைய செய்திகள்உலகம்

தென் அமெரிக்காவில் பரவிவரும் வரட்சி

செப்டம்பர் 23, 2024
உலகம்முதன்மை செய்தி

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப்க்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு.

பிப்ரவரி 3, 2025
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்!(video )

ஜூலை 22, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?