Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அமெரிக்க தூதரக அதிகாரி மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு!

செப்டம்பர் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாணத்தின் நிலைத்த நீடித்த அபிவிருத்திக்காக முதலீட்டாளர்களை வரவேற்கின்றோம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களுக்குப் பொறுப்பான செயலர் அந்தோனி பெர்னார்ட்டிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழுவுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

அதன்போது, வடக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக வந்துள்ளதாகவும், பல தரப்பினரையும் சந்தித்துள்ளதாகவும் அமெரிக்கத் தூதரகத்தின் செயலர் குறிப்பிட்டார்.

பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளின் விடுவிப்புக்கள் அது தொடர்பான முன்னேற்றம் மற்றும் எதிர்கால காணி விடுவிப்புக்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பில் ஆளுநரிடம், தூதரக அதிகாரி கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் மக்களின் காணிகள் மக்களுக்கே என்ற அரசாங்கத்தின் கொள்கை அடிப்படையில் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் முன்னைய ஆட்சியாளர்களால் மக்களுக்குச் சொந்தமான காணிகள், வயல் நிலங்கள் என்பன வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் வர்த்தமானி மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையை எடுத்துக்கூறிய ஆளுநர் இது திட்டமிட்ட நடவடிக்கை எனவும் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கம் அவற்றை விடுவிப்பதற்காக எடுத்துள்ள முயற்சிகளையும் விவரித்தார்.

கடந்த கால அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட பாகுபாடான நடவடிக்கைகளால் ஏற்பட்ட பிரச்சினைகளின் தாக்கம் தற்போதும் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர் மிகச் சவாலான நிலையிலும் அதனைத் தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

முந்தைய செய்தி தெல்லிப்பளை பிரதேச உதைபந்தாட்ட பெண்கள் அணி மாவட்ட சாம்பியனானது!
அடுத்த செய்தி மட்டக்களப்பு நகரில் தந்தையார் 21 கிராம் ஜஸ் போதையுடன் ஒருவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

எமில்நகர் கிராம மக்களுக்கு உதவிகள் வழங்கிய தென் பகுதி வர்த்தகர்கள்

டிசம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இரண்டு மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு.

ஜூன் 15, 2024
அண்மைய செய்திகள்உலகம்

விண்வெளியிலிருந்து தேர்தலில் வாக்களிக்கவுள்ள சுனிதா.

செப்டம்பர் 14, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகரசபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?