Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

எமில்நகர் கிராம மக்களுக்கு உதவிகள் வழங்கிய தென் பகுதி வர்த்தகர்கள்

டிசம்பர் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் கடும் மழை அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட மக்களும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் மன்னார் தீவு பகுதியில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் கிராம மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்ததோடு, தற்காலிக முகாம்களில் வசித்து வந்தனர்.தற்போது மழை வெள்ளம் குறைவடைந்த நிலையில் மக்கள் தமது இருப்பிடங்களை நோக்கி நகர்ந்துள்ளனர் .

இந்த நிலையில் குறித்த மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹெட்டியாராச்சி இன் வேண்டு கோளுக்கு அமைவாக கொழும்பு பிரதேச வர்த்தகர்களின் உதவியுடன் இன்றைய தினம் திங்கட்கிழமை (8) மதியம் குறித்த பிரதேச மக்களுக்கு எமில் நகர் கிராம அலுவலரின் பங்களிப்புடன் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் போது உதவிகளை வழங்கும் வர்த்தகர்கள் வருகை தந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் எரிக் பெரேரா அவர்களின் வழிகாட்டுதலில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் காற்று மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு எமில்நகர் கிராம மக்களுக்கான அத்தியாவசிய உதவிகள் நிவாரணமாக வழங்கி வைக்கப்பட்டது.

அப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, சிறுவர்கள், பெண்கள்,பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கான ஆடைகள், காலணிகள், பாடசாலை கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

எமில் நகர் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்களுக்கு இவ்வாறு உதவிகள் மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கடற்படை வீரர்களை கௌரவியுங்கள் – பல்கலை மாணவர்கள் கோரிக்கை
அடுத்த செய்தி ஊர்காவற்துறையின் பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் செயலாற்றவேண்டும் – நா.வேதநாயகன்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பரீட்ச்சார்த்த விமான சேவை ஆரம்பம்

ஜூன் 2, 2025
இலங்கை

முல்லைத்தீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி – ஊர் மக்களால் முற்றுகை

மார்ச் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே விசேட சந்திப்பு

ஜூலை 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?