ரஷ்யாவின் கம்சட்கா கரையோரப் பகுதியில் இன்றையதினம் 7.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தத்தால் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வதிர்வானது 7.4 ரிச்டர் அளவில், 39.5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் கம்சட்காவின் சில பகுதிகளில் சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் செவெரோ, குரில்ஸ்க் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக அவ்விடங்களிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.


