உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தில் இருந்து ரீல்ஸ் எடுத்த தம்பதி மற்றும் அவர்களது 3 வயது மகன் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீதாபூர் மாவட்டத்தில் உள்ள லஹர் பூரில் வசிக்கும் முகமது அகமது (26 வயது), அவரது மனைவி நஜ்னீன் (24 வயது) மற்றும் அவர்களது 3 வயது மகன் அப்துல்லா மூவரும்
இந்த விபத்தில் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.