தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் ஜீவா இன்று சேலத்திலிருந்து சென்னைக்கு காரில் குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்த போது ஊந்துருளி ஒன்று குறுக்கே வந்ததால் நடிகர் ஜீவா சென்ற கார் வீதியின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில், நடிகர் ஜீவா உட்பட அவரது குடும்பத்தினர் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.மேலும் காரின் முற்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.