இந்திய மாநிலமான பீகார், கிழக்கு சாம்பாரண் மாவட்த்தில் உள்ள மோதிஹரியில் இருந்து முஸாபர்பூன் வரை ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் லோகோ பைலட் திடீரென நடுவழியில் ரயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் பெண் ஒருவர் படுத்திருந்ததை பார்த்த அவர் சாதுர்யமாக அவசர பிரேக்குகளை பயன்படுத்தி தக்க சமயத்தில் ரயிலை நிறுத்தினார்.
பின்னர், ரயிலை நிறுத்தியதால் சக பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி வந்தனர். தண்டவாளத்தில் உறங்கி கொண்டிருந்த பெண்ணை சக பயணிகள் எழுப்பி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் அந்த பெண்ணிடம் விசாரிக்கும் போது குடும்ப பிரச்சனையின் காரணமாக இளம்பெண் விபரீத முடிவு எடுக்க வந்தது தெரியவந்துள்ளது. தன்னுடைய காதலை குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளாததால் இந்த முடிவு எடுத்துள்ளார்.
பின்னர், என்னை ஏன் காப்பாற்றினீர்கள்? நான் சாகவேண்டும் என்று அவர் அழுதுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.