ஒன்டாரியோ மாகாணத்தில் தற்போதைய வறண்ட கோடைக்காலத்தில் தௌசண்ட் ஐலேண்ட்ஸ் பகுதியில் பல தீ விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதால், அங்குள்ள வீடுகள் மற்றும் விடுதிகளின் (cottages) பாதுகாப்பு குறித்து கரிசனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆஷ் தீவில் (Ash Island) ஏற்பட்ட ஒரு விபத்தில் ஒரு வீடு முழுமையாக எரிந்து சாம்பலாகிய நிலையில், தீ விபத்துக்களைச் சமாளிக்க புதிய அணுகுமுறையை தீயணைப்புத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
லீட்ஸ் 1000 ஐலேண்ட்ஸ் தீயணைப்புச் சேவைத் தலைவர் மைக் பிரையர், அண்மையில் நடந்த தீ விபத்துக்களுக்குப் பிறகு, தமது தீயணைப்பு நிலையத்திற்கு 45-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாகத் தெரிவித்தார்.
இதன் பின்னணியில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு குடியிருப்பாளர்களுக்கு உதவும் வகையில் “டொக்-டு-டோர்” (Dock-to-Door) என்ற புதிய திட்டத்தை தீயணைப்புத் துறை தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தீயணைப்பு வீரர்கள் கையடக்க நீரேற்று பம்புகளை (portable fire pumps) எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து, மக்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.