கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெப்ப அலையால் ஒரு மரணம் பதிவான நிலையில், மொண்ட்ரியல் பொது சுகாதாரத் துறை ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வெப்பநிலை குறைந்த பிறகும், வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் தோன்றக்கூடும் என்றும், பொதுமக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மொண்ட்ரியல் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மொண்ட்ரியல் நகரத்தில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதி வரை, வெப்பம் தொடர்பான ஐந்து மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக, பொது சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் துடோர்ட் மேடெய் உறுதிப்படுத்தியுள்ளார்.
மக்களின் உடல் சில நாட்களுக்கு வெப்பநிலையைச் சமாளிக்க முயற்சிக்கும் எனவும் தொடர்ந்து வெப்பம் நிலவும்போது உடல் சோர்வடைந்து தளர்ச்சி அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, வெப்ப அலை முடிந்த பின்னரும் மொண்ட்ரியல் நகர மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று, எதிர்பார்க்கப்படுகின்றது.
