Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

காற்றாலை திட்டம் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தம்!

ஆகஸ்ட் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்திவைப்பதுடன், அதற்குள் குறித்த காற்றாலைத் திட்டம் தொடர்பாக உரிய தரப்பினர் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களை பெறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழுவர் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடலொன்றை நடாத்தியிருந்தனர்.

இக்கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கலந்துரையாடல் தொடர்பில் தெரியவருகையில்,மன்னார் தீவில், மக்கள் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் இத்தகைய காற்றாலைத் திட்டங்கள் தேவையில்லை என இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், மன்னார் பிரஜைகள்குழுப் பிரதிநிதிகளாலும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு மன்னாரில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு மன்னார் மக்கள் எதிரானவர்களில்லையெனவும், மன்னார்த் தீவிற்குள் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைக்கும் செயற்பாட்டையே மன்னார் மக்கள் எதிர்ப்பதாகவும் ஜனாதிபதியிடம் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்தகால இனவாத அரசாங்கங்கள் இத்தகைய காற்றாலை மின்உற்பத்திக் கோபுரங்களை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதிகளை வழங்கியுள்ளபோதும், கற்றாலை அமைப்பதுதொடர்பில் மக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்டறியப்படவில்லை எனவும் இதன்போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டதுடன், காற்றாலைத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன், இவ்விடயத்தில் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

மேலும் இதன்போது மன்னார் காற்றாலைத்திட்டத்தால் ஏற்படும் சிக்கல் மற்றும் பாதிப்பு நிலைமைகள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டள்ளது.

இந்நிலையில் குறித்த காற்றாலைத் திட்டத்தை ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்தி, மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சந்திப்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரிஷாட் பதியுதீன், உபாலி சமரசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், மன்னார் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கை வெளியாகியுள்ளது
அடுத்த செய்தி மக்களுக்கு வரி சுமையை குறைக்க கோரி எதிர்க்கட்சி கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

மார்ச் 23, 2026
இலங்கை

இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் நே- யோ

டிசம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சுன்னாகத்தில் குழு மோதல் – ஐவர் காயம்

நவம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

களமோட்டை வயலுக்குச் செல்வதற்கு ஆற்றுப்பாலம் இன்மையால் விவசாயிகள் அவதி

ஜூலை 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?