வெள்ளை மாளிகையின் நுழைவாயிலில் இருந்த முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உருவப்படம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ட்ரம்பின் உத்தரவின் பேரில் பார்வையாளர்கள் பொதுவாக காண முடியாத இடத்திற்கு ஒபாமாவின் உருவப்படம் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாற்றம், ட்ரம்ப் மற்றும் ஒபாமாவுக்கு இடையிலான அரசியல் வேறுபாடுகளை மீண்டும் முன்வைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யா தன்னை ஆதரிக்க ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டே வதந்திகளை பரப்பியது என ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.
அதன் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
