தென்னாபிரிக்க நாடான ஜாம்பியாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற நிலையில், மீண்டும் ஜனாதிபதியாக ஹகைண்டே ஹிச்சிலேமா தெரிவாகியுள்ளார்.
குறித்த தேர்தலில் ஆட்யிலிருந்த ஜனாதிபதி ஹகைண்டே ஹிச்சிலேமாவும், எதிர்க்கட்சி தலைவரான பிரைன் முந்துபிலே ஆகியோர் போட்டியிட்ட நிலையில், ஜனாதிபதி ஹகைண்டே ஹிச்சிலேமா 61.4 சதவீத வாக்குகளோடு வெற்றி பெற்றதுடன், பிரைன் முந்துபிலே 38 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றனர்.

