Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

களமோட்டை வயலுக்குச் செல்வதற்கு ஆற்றுப்பாலம் இன்மையால் விவசாயிகள் அவதி

ஜூலை 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவை நிலையப்பிரிவிற்குட்பட்ட மதவளசிங்கன்குளம் நீர்ப்பாசனக்குளத்தின் கீழுள்ள களமோட்டை வயல்பகுதிக்கு ஆற்றைக் கடந்துசெல்வதற்கு பாலம் இன்மையால் விவசாயிகள் பெரும் இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு இதுதொடர்பில் தெரியப்படுத்தியதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், குறித்த பாலத்தினை நிர்மாணிப்பதுதொடர்பில் கவனம் செலுத்தவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள மதவளசிங்கன்குளத்தின் கீழுள்ள களமோட்டை பகுதி வயல்நிலங்களுக்கு ஆற்றைக்கடந்து செல்வதற்கான பாலம் இன்மையால் விவசாயிகள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

களமோட்டைப் பகுதியில் 220ஏக்கர் வயல்நிலங்களில் பெரும்போகம் மற்றும் சிறுபோக நெற்பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த களமோட்டை வயல்பகுதிக்கு செல்லும் வழியின் குறுக்கே உள்ள ஆற்றைக் கடந்துசெல்வதற்கு பாலமொன்று இன்மையால் நெற்பயிற்செய்கைக் காலத்தில் நிலப்பண்படுத்தலுக்கு உழவியந்திரத்தை கொண்டுசெல்லுதல், விவசாய உள்ளீடுகளை எடுத்துச்செல்லுதல், விவசாய நிலங்களக்கான காவலுக்குச் செல்லுதல், அறுவடைக்காலத்தில் அறுவடை இயந்திரத்தைக் கொண்டுசெல்வது, அறுவடையை எடுத்துச்செல்வது உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் விவசாயிகள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை சிலசந்தர்ப்பங்களில் 35அடி தூரமான ஆற்றைக்கடப்பதற்குப்பதிலாக 15கிலோமீற்றர் சுற்றியே தமது விவசாய நிலங்களுக்கு செல்லவேண்டிய அவலநிலையை களமோட்டைப் பகுதியில் நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைக்கமைய நிலமைகளை நேரில்சென்று பார்வையிட்ட வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த ஆற்றுப்பாலத்தை அமைப்பதுதொடர்பில் தம்மால் கவனம்செலுத்தப்படுமெனத் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த களவிஜத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடன் முள்ளியவளை கமநலசேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் பேரம்பலம் தயாரூபன், மதவளசிங்கன்குளம் கமக்கார்அமைப்பின் பிரதிநிதிகள், களமோட்டைப்பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிககை எடுப்பதாக நீதி அமைச்சர் உறுதி
அடுத்த செய்தி உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இலங்கை வங்கி ஊழியர்களால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு!

மே 29, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

பல்சர்(Pulsar) நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் லோயிக் கோர்டெல் பதவிநீக்கம்

ஜூன் 5, 2026
இலங்கை

அனுராதபுரத்தில் வாகன விபத்து

ஜனவரி 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு வெல்லாவெளியில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது

மே 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?