Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

ஆகஸ்ட் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடமாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தில் இந்த ஆண்டு 7,606 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும், உள்ளூராட்சி அமைச்சின் கீழான உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக இந்த ஆண்டு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்ட ரீதியாகப் பின்வரும் எண்ணிக்கையான நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படவுள்ளது.

யாழ். மாநகர சபை – 120 நாய்கள் ஏனைய யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகள் – 5,216 நாய்கள்
கிளிநொச்சி மாவட்டம் (கரைச்சி தவிர்ந்த) – 350 நாய்கள்
முல்லைத்தீவு மாவட்டம் – 750 நாய்கள்,
வவுனியா மாவட்டம் (மாநகர சபை உள்ளடங்கலாக) – 1,170 நாய்கள்

இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, வவுனியா மாவட்டத்தில் இதுவரை 72 நாய்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவுறுத்தப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, ஏனைய மாவட்டங்களிலும் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, நாளைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாநகர சபையிலும், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையிலும், எதிர்வரும் 23ஆம் திகதி வவுனியா மாநகர சபையிலும் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அமைச்சரவை மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய ‘விலங்கு நலச் சட்டத்தின்’ ஏற்பாடுகளுக்கு அமைவாக, விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு அதியுயர் முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

விலங்குகளின் நலனைக் காப்பதன் ஊடாக ஆரோக்கியமானதொரு சமூகத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கு, அனைத்துப் பொதுமக்களும் உரிய தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டல்
அடுத்த செய்தி மன்னார் மடு திருத்தல பகுதியில் விபத்து -இளைஞனொருவர் பலி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது

நவம்பர் 1, 2026
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்…

அக்டோபர் 8, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் வீட்டில் கசிப்பு காய்ச்சிய இளைஞர் கைது!

ஏப்ரல் 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற வெலிகம சஹான் கைது

ஜூலை 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?