பங்களாதேஷில் பாடசாலை கட்டடத்தின் மீது அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவ்விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து நாளை ஒருநாள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
