தாய்லாந்து-கம்போடிய எல்லையில் இரண்டு நாட்கள் சண்டைக்குப் பிறகு, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான இந்த மோதல்களில், 16க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 1,30,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கம்போடியாவின் ஐ.நா. தூதர், “நிபந்தனையற்ற” போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், சண்டைக்கு அமைதியான தீர்வு தேவை என்றும் கூறினார்.
போர்நிறுத்தம் குறித்து தாய்லாந்து இதுவரை எந்த பொதுக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
எல்லை மோதல் “போராக அதிகரிக்கக்கூடும்” என்று தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் நேற்று எச்சரித்தார்.
