உலகில் 7 போர்களை நிறுத்திய தனக்கு, ரஷ்யா மற்றும் யுக்ரைன் விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யா மற்றும் யுக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று முனைப்புடன் அமெரிக்க ஜனாதிபதி டரம்ப் பல பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
எனினும், இரண்டு நாடுகளுக்கும் இடையில் இதுவரை எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், உலகில் 7 போர்களை நிறுத்திய தனக்கு, ரஷ்யா மற்றும் யுக்ரைன் விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது என ட்ரம்ப் கூறியுள்ளார்.
புட்டினும், ஸெலன்ஸ்கியும் இணைந்து செயல்படுவார்களா என்று தாங்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
