Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மனு தாக்கல்!

ஆகஸ்ட் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செல்லுபடியற்றதாக்க கோரி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை உள்ளிட 31 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஜனவரி 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில் இது தொடர்பாக இரண்டு அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், பொதுமக்களுக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ தெரிவிக்காமல் அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கை அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், இந்த இரண்டு அமைச்சரவை முடிவுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய எடுக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை குடிமக்களின் பயோமெட்ரிக் தரவை இந்தியா அணுக அனுமதிக்கும் என்றும், இதன் மூலம் இந்தியா இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட அனுமதிக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கொள்முதல் செயல்முறைக்கு மாறாக, திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முடிவு தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவுடன் தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொடர்புடைய அமைச்சரவை முடிவுகளைச் செல்லாததாக்கும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும், இந்த அடையாள அட்டை திட்டத்தைச் செயல்படுத்துவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடதயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள்!
அடுத்த செய்தி ரஷ்யா மற்றும் யுக்ரைன் விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது-டொனால்ட் ட்ரம்ப்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில்துஷ்பிரயோக குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

ஆகஸ்ட் 8, 2025
இலங்கை

கயிறு கட்டிய நிலையில் குளத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

ஹட்டனில் பாடசாலை மைதானத்தில் சுற்றித் திரியும் நரிகள்!

அக்டோபர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நீர் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது – சந்தன பண்டார

மார்ச் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?