பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பணிப்புறக்கணிப்பு ஆரம்பமாகும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
மருத்துவ அதிகாரிகளின் இடமாற்ற செயல்முறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.
