உலகின் நம்பர்1 செஸ்வீரர் மெக்னஸ் கார்ல்சனை
மீண்டும் வீழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா.
அமெரிக்காவின் லொஸ் வேகாஸில் நடைபெற்று வரும் Freestyle செஸ் தொடரில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 43வது நகர்வில் மெக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
கடந்த 3 நாட்களில் கார்ல்சனை 2வது முறையாக பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.

