நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிக்கும் தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டீட் என்பவர் 2018-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார்.
இதன்போது இரண்டு முறை அவரது ஒப்பந்தம் நீடிக்கப்பட்டது.
சமீபத்தில் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டீட் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராப் வால்டர் நியமிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.
கேரி ஸ்டீட் பதவியில் இருந்து விலகிய நிலையில் நியூசிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக 49 வயதான வால்டர் என்பவரே பொறுப்பேற்றுள்ளார்.
வால்டரின் பதவிகாலம் ஜூன் நடுப்பகுதியில் இருந்து தொடங்கி 2028 ஐசிசி டி 20 உலகக் கோப்பை இறுதி வரை நீடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
