Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கட்சிக்கு எதிராக செயற்பட்டோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

ஜூலை 19, 2025
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தீர்மானத்துக்கு எதிராகவும் கட்சியின் கட்டுக்கோப்பை மீறியும் கட்சி யாப்புக்கு விரோதமாக கட்சி மாறி தவிசாளரான பைரூஸ் உட்பட சில இடங்களில் இவ்வாறு செயற்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை கோயிலை இடித்து இறைச்சி கடையும் மயானத்தை உடைத்து பிரதேச செயலகம் கட்டப்பட்டது என்று குற்றச்சாட்டை சுமத்தியிருந்த அவரோடு கைகோர்த்து இந்த ஆட்சியை கைப்பற்றியது பாராட்டத்தக்கது என முன்னாள் நா.உ. அமீர்அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு வெய்ஸ் ஒப் மீடியா ஊடக கற்றை நிலையத்தில் இன்று சனிக்கிழமை (19) இடம்பெற்று ஊடக மாநாட்டில் இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமீர்அலி மற்றும் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஓட்டமாவடி கோரளைப்பற்று மேற்கு பிரதேசசபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மற்றும் ஜக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான உடன்பாட்டின் அடிப்படையில் ஜக்கிய மக்கள் சக்தி சின்னத்திலே போட்டியிட்டோம்.

இதில் 8 வட்டாரங்கனை நாங்கள் வென்றோம், அதனோடு போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இரண்டு வட்டாரங்களை வென்றதுடன், 4 போனஸ் ஆசனங்கள் கிடைத்தது.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்திக்கு இரண்டு ஆசனங்களும் ஜக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனமும் இலங்கை தமிழரசு கட்சிக்கு ஒரு ஆசனமும் சுயேட்சைக்குழு ஒன்றிற்கு ஒரு ஆசனம் உட்பட 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ஜூன் 16ம் திகதி சபை அமர்வு இடம்பெற இருந்த நிலையில் அன்றைய தினம் எனது கட்சி காரியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கட்சி எவ்வாறு சொல்லியுள்ளதே அதன் அடிப்படையில் தவிசாளராக கலால்தீன் பிரதி தவிசாளராக அன்சார் ஆக்கவேண்டும் என்ற அடிப்படையில் கட்சி எடுத்துக் கொண்ட தீர்மானத்தை அவர்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்தினேன்.

இதன்போது தற்போது ஓட்டமாவடி பிரதேச சபையினுடைய தவிசாளர் பைரூஸ் அந்த கூட்டத்திலே தொடர்ந்து கலந்துகொண்டார். காலை 10 மணி தொடக்கம் இடம்பெற்ற அந்த கூட்டத்தில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் இரண்டாவது அமர்வாக தெளிவாக பேசினேன் அதில் கட்சி பெயர் குறிப்பிட்டு சொல்லப்பட்டவரை தவிசாளராகவும், ஜக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரதி தவிசாளராகவும் தெரிவு செய்வது என தெரிவித்தேன்.

இதன்போது ஒட்டு மொத்தமாக 9 பேரும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன் எனது கையில் பைரூஸ் உட்பட அனைவரும் சத்தியம் செய்துவிட்டு சென்றனர். இதன்படி தவிசாளரான பைரூஸ் சாப்பிட்டுவிட்டு கையை கழுவிவிட்டு வருகின்றேன் என ஓடோடிச் சென்று அங்கு சென்று அவர்களுக்கு உடன்பாடு தெரிவித்து கட்சி மாறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புலா தமிழரசுகட்சியுடன் கைகோர்த்து இந்த ஆட்சியை கைப்பற்றினர். அதில் எனக்கு வியப்பான விடயம் ஓட்டமாவடியில் கோயிலை இடித்து இறைச்சிகடை கட்டியது எனவும் மயானத்தை உடைத்து பிரதேச செயலகம் கட்டப்பட்டது என்று குற்றச்சாட்டை சுமத்தியிருந்த போதும் கூட இலங்கை தமிழரசு கட்சி அவரேடு கைகோர்த்து இந்த ஆட்சியை கைப்பற்றிய பணியை செய்திருப்பது பாராட்டத்தக்கது.

எனினும் அப்படியான நிலையில் அவர்கள் உள்ளார்ந்த ரீதியாக எங்களுடைய கட்சி உறுப்பினராக இருந்த பைரூஸ் தவிசாளராக்கி பிரேரணை கொண்டுவந்து ஒரு அருவருப்பான முறையிலே சபையை வழிநடாத்தியுள்ளனர்.

எனவே எங்கள் கட்சி தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டதுடன் சத்தியத்தை மீறி கட்சியின் கட்டுக்கோப்பை மீறி கட்சி யாப்புக்கு விரோதமாக தவிசாளராக வந்திருப்பது சட்ட விரோதமானது எனவே கட்சியின் ஒழுக்காற்று குழு மிகவும் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதுடன் அவர் மாத்திரமல்ல நாட்டிலே எங்கள் கட்சிக்குள் சில இடங்களில் இவ்வாறு இடம்பெற்றதன் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்றார்.

முந்தைய செய்தி முத்தமிழ் வித்தகரின் நூற்றாண்டு விழா
அடுத்த செய்தி லொஸ் ஏஞ்சல்ஸில் வெடிப்பு சம்பவம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

காங்கேசன்துறை வலிவடக்கு பிரதேசபையினால் சுயதொழில் பயிற்சி வழங்கல்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். அடையாள அட்டை இன்றி கடைக்கு சென்றவர் கைது

மார்ச் 23, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மீனவரை முழங்காலில் வைத்து தாக்கிய சம்பவத்தில் கடற்படை அதிகாரிக்கு பிணை

ஏப்ரல் 24, 2026
1
இலங்கை

கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா..

மார்ச் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?