Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். அடையாள அட்டை இன்றி கடைக்கு சென்றவர் கைது

மார்ச் 23, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்து , அவரிடம் இருந்து கைரேகைகள் பெற்று விடுவித்துள்ளனர்.

குறித்த கைது சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் தனது வீட்டாருக்கு அறிவிக்க அனுமதி வழங்காது அவரது கையடக்க தொலைபேசியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

காங்கேசன்துறை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கு காலையில் நடந்து சென்ற வேளை வீதியில் முச்சக்கர வண்டியில் நின்ற பொலிஸார் அவரை அழைத்து விசாரித்து, தேசிய அடையாள அட்டையை கோரினார்.

அருகில் உள்ள கடைக்கு நடந்து வந்ததால், பேர்ஸ் எடுத்து வரவில்லை அருகில் தான் வீடு எடுத்து வந்து தருகிறேன் என கூறிய போது அவரை வலுக்கட்டாயமாக முச்சக்கர வண்டிக்குள் பொலிஸார் இழுத்து ஏற்றினார்கள்.

அப்போதும் தனது வீட்டிற்கு அருகில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவர் வசிக்கின்றார். அவரிடம் தன்னை பற்றி விசாரியுங்கள் என கூறி அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்க முற்பட்ட போது கையடக்க தொலைபேசியை வலுக்கட்டாயமாக பறித்துள்ளனர்.

வீட்டில் மனைவிக்கு அழைப்பு எடுத்து அடையாள அட்டையை எடுத்து வருமாறு கூற தொலைபேசியை தருமாறு கோரிய போதிலும் பொலிஸார் தொலைபேசியை கொடுக்கவில்லை..

அவரை வலுக்கட்டாயமாக இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று , அங்கு விசாரணைகளை முன்னெடுத்து , சிங்களத்தில் எழுதிய தாள்களில் கையெழுத்து வாங்கி , இரண்டு கைகளின் அடையாளங்களையும் பெற்று , உடம்பில் உள்ள அங்க அடையாளங்களையும் குறித்துக்கொண்டனர்.

அதற்கு இடையில் அடையாள அட்டை இல்லை என பொலிஸார் கணவனை கைது செய்து கொண்டு சென்றனர் என மனைவிக்கு அயலவர்கள் கூறியதை அடுத்து , அவர் அயலவர் ஒருவரிடம் அடையாள அட்டையை கொடுத்து , பொலிஸ் நிலையம் அனுப்பி வைத்து விட்டு , எனது பிள்ளைகளை பாடசாலைக்கு கூட அனுப்பாது அயல் வீட்டில் பிள்ளைகளை விட்ட பின்னர் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

அதற்கு இடையில் அடையாள அட்டையை பொலிஸ் நிலையத்தில் அயலவர் கொண்டு வந்து கொடுத்ததும் , கைதானவருக்கு உணவளித்து , அவரை விடுவித்தனர்.

மனைவி பொலிஸ் நிலையம் வந்ததும், கணவனை கைது செய்த இடத்திலேயே தாமே கொண்டு வந்து விடுவதாக கூறி மீண்டும் முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து கைது செய்த இடத்திற்கு அருகில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

தன்னிடம் பெற்ற கைரேகையால் பின்னாட்களில் பொலிஸார் ஏதேனும் வழக்குகளை தொடுத்து விடுவார்களோ என்ற பயம் தனக்கு இருக்கிறது என பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் அச்சத்தில் இருக்கிறார்.

முந்தைய செய்தி கச்சதீவில் புதுப்பொலிவுடன் புனித அந்தோனியார்
அடுத்த செய்தி வடக்கில் தனியார் பேருந்துகளுக்குத் தேவையான டீசலை பெற்றுக் கொள்ள விசேட ஏற்பாடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு…

மே 11, 2025
அண்மைய செய்திகள்கனடா

தனது நாட்டில் தங்கும் கனடியர்களைப் பதிவு செய்யவுள்ளது அமெரிக்கா!

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் போயா தினத்தில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

ஆகஸ்ட் 9, 2025
அண்மைய செய்திகள்கனடா

அடுத்த 15 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 10 புதிய அணு உலைகள் கட்டமைப்பு

ஜூன் 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?