2024 ஒதுக்கப்பட்ட வரவுசெலவுதிட்ட நிதியில் நிலைபோறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் முகமாக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஐந்துநாள் பயிற்சி வழங்கல் நிகழ்வு கொல்லங்கலட்டி அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
பிரதேச வளங்களை பயன்படுத்தும் நோக்காக கைத்தொழில் அபிவிருத்திசபையின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை வலிவடக்கு பிரதேச சபையின் நிதிப்பங்களிப்பில் ஆரம்பமான இந்த நிகழ்வில் சுமார் 20 பயனாளிகள் கலந்துகொண்டனர்.