கிழக்கு லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியிலுள்ள போலீஸ் நிலையத்தில் (அகாடமி) வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள பிஸ்கைலுஸ் மைய அகாடமி பயிற்சி நிலையத்தில் குறிப்பிட்ட வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது
இந்த விபத்து தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாண்டி, மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் வெடிவிபத்திற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.
இந்த விபத்து குறித்து, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்த இருக்கின்றனர். வெடிகுண்டு தொழில்நுட்ப வல்லுநர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் லாரா எமில்லர் தெரிவித்துளள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


