Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

தலிபான் அரசை அங்கீகரிப்பதில் அவசரம் இல்லை பாகிஸ்தான் தெரிவிப்பு!

ஜூலை 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான் அரசை அங்கீகரிக்க எவ்வித அவசரமும் காட்டவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ரஷ்யா கடந்த 4-ஆம் திகதி அங்கீகாரம் அளித்தது. இதன் மூலம் தலிபான் அரசை அங்கீகரித்த முதல் நாடு என்ற பெயரைப் பெற்றது.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடா்பாளா் சௌஹத் அலி கான் இது தொடா்பாக இஸ்லாமாபாதில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தலிபான் அரசை அங்கீகரிக்கும் விடயத்தில் பாகிஸ்தானின் நலனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எங்களுக்கு எவ்வித அவசரமும் இல்லை. ரஷ்யா அளித்துள்ள அங்கீகாரம் அந்த இரு நாடுகளுக்கு இடையிலான விடயம். அதில் பாகிஸ்தான் கருத்து கூற முடியாது என்றார்.

பாகிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்று செயல்படும் தலிபான் பாகிஸ்தான் உள்ளிட்ட அந்நாட்டுக்கு எதிரான பல்வேறு தீவிரவாத அமைப்பினா் ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டே செயல்படுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும், துணை பிரதமருமான இஸாக் தார் அண்மையில் ஆப்கானிஸ்தான் பயணம் மேற்கொண்டார். அதைத் தொடா்ந்து சீனா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் சீனாவில் சந்தித்துப் பேசினா்.

இதேவேளை ஆப்கானிஸ்தான் இடைகால வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகி இம்மாத இறுதியில் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி டெக்சாஸ் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
அடுத்த செய்தி கியூபெக்கின் ஆர்சம்பால்ட் சிறைச்சாலையில் கைதி தப்பி ஓட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

வெனிசுலாவில் இரகசிய நடவடிக்கைகளுக்கு ட்ரம்ப் அங்கீகாரம்

அக்டோபர் 16, 2025
1
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பதிவான நில அதிர்வு…

ஏப்ரல் 12, 2025
உலகம்

பாகிஸ்தானில் 22 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

நவம்பர் 26, 2025
உலகம்

சீரற்ற வானிலையால் அம்மா உணவகங்களில் இலவச உணவு.

நவம்பர் 30, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?